Advertisment

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்... 'மாஸ்டர்' பட பாணியில் வாக்கு சேகரிக்கும் விஜய்யின் நகல்

vijay makkal iyakkam campaign goes viral

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மதுரையில் வாக்கு சேகரித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் நடிகர் விஜய்யை போலவே தோற்றமுடைய ஒருவரை கேரளாவில் இருந்து அழைத்து வந்து 88 வது வார்டில் போட்டியிடும் நாகேஸ்வரியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வைத்தனர். அச்சு பிசகாமல் இருக்கும் நகல் விஜய்யைபார்த்து மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும், விஜய் சாயலில் இருக்கும் நபர் 'மாஸ்டர்' பட பாணியில் பேருந்தில் எறியும், டீ கடையில் வடை சுட்டும் வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியாகி சமூக வைளதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe