Advertisment

‘எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா...’ - லியோவின் புது அப்டேட்

vijay leo update

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு,அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22 ஆம் தேதி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல் சில விமர்சனத்தையும் எதிர்கொண்டது. பாடல் முழுவதும் விஜய் புகைபிடித்துக் கொண்டே நடனமாடியது மற்றும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருந்ததாலும் எதிர்ப்புகள் கிளம்ப, 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும்; உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது.

அண்மையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில்விஜய்யின் போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

actor vijay lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe