vijay leo kashmir schedule wrap

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்புதிய படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. நேற்று காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் நாங்கள் பத்திரமாக உள்ளோம் என படக்குழு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், காஷ்மீர் ஷெட்யூலின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் காஷ்மீரில் மொத்தம் 50 நாள் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாகக் கூறிய படக்குழுவினர், அதில் நடந்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதில்ஒருவர், “அங்குள்ள மக்களுடன் உரையாடுவதற்கு கஷ்டமாக இருந்தது. நிறைய பேருக்கு ஹிந்தியே புரியவில்லை. காஷ்மீரி மற்றும் உருது மொழியில் தான் பேசினார்கள். அவர்களுக்கு பொறுமையாக சொல்லி நடிக்க வைத்தோம்.” என்றார். இந்த வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.