லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
அண்மையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித்மற்றும் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'நா ரெடி' என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளான வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடல் தொடர்பான போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. போஸ்டரை பார்க்கையில் ஒரு பார்ட்டி சாங் போல் தெரிகிறது. மேலும் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து 'நா ரெடி...' என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.
#NaaReadypic.twitter.com/1YcbAQMs8f
— Vijay (@actorvijay) June 16, 2023