Skip to main content

'இந்த கத்தி வேற ரகம்...' - எச்சரிக்கும் விஜய்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

vijay leo first single released

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில் தனது கதாபாத்திரத்தின் வடிவத்தை விரிவாகக் கூறுவது போல் அமைந்துள்ளது. மேலும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு தீனி போடும் வகையில் உருவாகியுள்ளது. விஷ்ணு வரியில் வரும் 'கத்தி... பல கத்தி, இங்க என்ன குத்த காத்திருக்கு...' எனத் தனது சூழலை விவரிக்கிறார். அடுத்த வரியாக 'இந்த கத்தி வேற ரகம்... வேணா ஸ்கெட்ச் எனக்கு...' என வில்லன்களை எச்சரிக்கும் விதமாக இருக்கிறது. 

 

 


 

சார்ந்த செய்திகள்