/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_116.jpg)
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா (வயது 16) சென்னையில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர்இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர்.அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டு, அது முடிந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜா, குஷ்பு, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, மிஷ்கின் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் விஷால், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இரங்கல் பதிவைப் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படக்குழு விஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று வெளியாகவிருந்த பட போஸ்டரை நாளை ஒத்திவைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)