Advertisment

''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள்'' - பிரசன்னா கேள்விக்குப் பதிலளித்த விஜயலக்ஷ்மி!

ngcgc

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைக்காலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Advertisment

இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடிகர் பிரசன்னா, ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' என மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

Advertisment

இதற்குப் பலரும் பதில் அளித்து வரும் நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி இதற்குப் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில்.. ''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள். அவர்கள் கடந்த இரண்டு தடவை எங்கள் பில் தொகையை இரட்டிப்பாக்கி, தற்போது அதைச் செலுத்தச் சொன்னார்கள். எங்களுக்கு வேறு வழியில்லை. ஏனெனில் அது தமிழ்நாடு மின்சார வாரியம். அங்குப் பதில் சொல்லக் கூட யாரும் இல்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.

actorprasanna actress vijayalakshmi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe