"உலகத்தையே ஜெயிக்க கூடிய ஆயுதம் ஒன்னு இருக்கு" - விஜய்யின் க்யூட் குட்டி ஸ்டோரி

vijay kutty story in varisu audio launch

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய், வழக்கமான தன் பாணியில் குட்டி கதை சொன்னார்.

அவர் பேசுகையில், "ஒரு குடும்பத்தில் அண்ணண், தங்கச்சி இருந்தாங்க. அப்பா தினமும் வேலைக்குப் போய்ட்டு வந்து இரண்டு பேருக்கும் சாக்லெட் வாங்கி கொடுப்பார். இதில் தங்கச்சி பாப்பா சாக்லெட்டை அப்போதே சாப்பிட்டு விடுகிறது. ஆனால், அண்ணன் அடுத்த நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் சாக்லெட்டை மறைத்து வைக்கிறார்.

அண்ணன் போனதும் மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை தங்கச்சி பாப்பா எடுத்து சாப்பிட்டு விடுகிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கு. ஒருநாள் தங்கச்சி பாப்பா அண்ணனிடம், அன்பு அன்புனு சொல்றாங்களே அப்படினா என்ன அண்ணா? எனக் கேட்குது. அதற்கு அந்த அண்ணண், நீ உன்னோட சாக்லெட்டையும் சாப்பிடுற, நான் மறைச்சி வச்சிருந்த என்னோட சாக்லெட்டையும் சாப்டுற. அது தெரிஞ்சும் நான் தினமும் அங்கயே சாக்லெட் வெக்குறேன்ல அதுதான்மா அன்புனு சொல்லறாரு.

உலகத்தையே ஜெயிக்கக் கூடிய ஆயுதம் ஒன்னு இருக்கு. அது அன்பு தான். அதில் ஒன்று உறவுகள் மற்றொன்று நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலே போதும்" என்றார். இதனை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரக் கூச்சலிட்டனர்.

actor vijay varisu movie
இதையும் படியுங்கள்
Subscribe