vijay keo team thanked kashmir government

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைத்தது.

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது. இப்படத்தின் கதை காஷ்மீரில் நடைபெறுவதாக அமைந்திருந்ததால், ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ படக்குழு ஜம்மு அண்ட் காஷ்மீர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ், அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, “காஷ்மீரில் எங்கள் படமான லியோ படத்திற்கு ஒத்துழைத்த ஜம்மு அண்ட் காஷ்மீர் அரசு, அதன் கவர்னர் மனோஜ் சின்ஹா, தகவல் துறைமற்றும் சுற்றுலாத்துறை என எங்களுக்கு பாதுகாப்பு அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisment

காஷ்மீர் எப்போதும் நமது எதிர்காலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவிசெய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.