Skip to main content

ஜெயலலிதா வேஷத்திற்கு இவங்கள ஏன் தேர்வு செஞ்சேன்னா...? - இயக்குனர் விஜய் சொன்ன பதில் 

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் பேசியபோது...
 

jk

 

"ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம். தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம். இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார். இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்" என்றார்.
 

kanchana

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அவரின் ஒப்புதல் தேவையில்லை'' - 'தலைவி' படத்திற்கு தடைகோரிய வழக்கில் இயக்குனர் தரப்பு வாதம்!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

 '' His approval is not required '' - Director's argument for banning 'Talaivi' movie!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் 'தலைவி' திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் 'தலைவி' படம் எடுக்க தடைவிதிக்க முடியாது என படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ‘தலைவி’ படம் எடுக்க தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் படத்தை தீபா தரப்பிடம் போட்டுக்காட்ட வேண்டிய தேவையும் இல்லை எனவும் இயக்குனர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Next Story

"அரவிந்த்சாமி மாதிரியும் தெரியல, எம்.ஜி.ஆர் மாதிரியும் தெரியல" - நியூ லுக் பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனவத்தும், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்து வருகின்றனர். தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு இயக்குநர் ராஜமெளலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

thalaivi movie-first-look-mgr-character-teaser-release

 

 

இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் லுக் வெளியிடபட்டுள்ளது. இதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த லுக் அரவிந்த்சாமி மாதிரியும் தெரியல, எம்.ஜி.ஆர் மாதிரியும் தெரியல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில் 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்ற பாடலுடன் தொடங்கும் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.