வனமகன் படத்தையடுத்து இயக்குனர் ஏ எல் விஜய் விஜய் இயக்கியிருக்கும் படம் கரு. சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் இயக்குனர் விஜய் கரு படத்தில் நடித்த குழந்தையை குறித்து பேசுகையில்..... ‘கரு’ படம் எடுக்க முடிவு செய்த போது இதில் வேறு ஒரு குழந்தையைதான் நடிக்க வைத்தோம். அவரை வைத்துதான் ‘கரு’ முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த குழந்தை நடிக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு ஒரு விளம்பர படத்தில் பேபி வெரோணிக்காவை பார்த்து இந்த படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயத்தை இப்போதுதான் சொல்கிறேன். இது சாய்பல்லவிக்கே இப்போதுதான் தெரியும்” என்று கூறினார்.