'மாஸ்டர்' வெளியீடு தாமதம்..! தயாரிப்பாளருக்கு உதவும் விஜய்!

vdd

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தபடத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மாஸ்டர் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தற்போது திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே 'மாஸ்டர்' வெளியீடு தாமதமாவதால் விநியோகஸ்தர் தரப்புக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் நடிகர் விஜய் தன் அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை இப்பட இணை தயாரிப்பாளர் லலித்துக்கு தரவிருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே '96' பட ரிலீசுக்கு லலித் உதவியதால், நடிகர் விஜய் சேதுபதி லலித் தயாரிக்கும் துக்ளக் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

master master film
இதையும் படியுங்கள்
Subscribe