vijay the goat first day box office collection

விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (05.09.2024) வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனத் தயாரிப்பில் யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மறைந்த விஜயகாந்த் தோற்றத்தை உருவாக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் விஜய்யின் இளமை பருவ தோற்றத்தை உருவாக்க டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருந்தனர்.

Advertisment

இப்படத்திற்கு கேரளாவில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு காட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி முதல் சிறப்பு காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இப்படம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் ஆன்லைனில் 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இப்படத்திற்கான வசூல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனம், உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.126 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “வசூலில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்” என்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.140 கோடிக்கு மேல் வசூலான அப்படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.