vijay the goat 13 days box office collection

விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை வெங்கப் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

விஜய்யின் வில்லனிசம், த்ரிஷாவின் நடனம், சிவகார்த்திகேயனின் கேமியோ என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருந்தும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.126 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுததாக முதல் நான்கு நாட்களில் ரூ.288 கோடிக்கும் மேலாக வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் படத்தின் டிக்கெட் பெருமளவு விற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் கூறி வருகிறது.

இதனிடையே படத்தின் இடம்பெற்ற ‘விசில் போடு...’ மற்றும் ‘சின்ன சின்ன கண்கள்...’ ஆகிய பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் 13 நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment