
நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்கிய படக்குழு, ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடத்திவந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பை பாதியில் கைவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது.
பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது முக்கிய காட்சிகளைப் படமாக்கிவரும் நிலையில், 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று தற்போது கசிந்துவருகிறது. இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், அபர்ணா தாஸ், சைன் டாம் சக்கோ, அன்குர் அஜித் விகால், லில்லிபுட் ஃபாரிக்கி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)