யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

vijay gifted yogi babu surprisely

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போதுரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார்.

alt="vijay gifted yogi babu surprisely " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5e0075e6-58d3-4236-aa81-c37f320c51c5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_37.jpg" />

மேலும், ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கில்' உள்ளிட்ட படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்ட்ராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோக ஹெச்.வினோத் இயக்கத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், யோகிபாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனை யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, கிரிக்கெட் ஹெல்மெட், க்ளவுஸ் மற்றும் விஜய் வாங்கிக் கொடுத்த பேட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "இந்த பேட்டை சர்ப்ரைஸா கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். யோகிபாபுகிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் நன்றாக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

actor vijay actor yogi babu
இதையும் படியுங்கள்
Subscribe