Advertisment

கலங்கிய விஜய் - கண்ணீர் வடித்த புஸ்ஸி ஆனந்த் 

vijay get emotional at tvk flag introducing function

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026ல் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து நடத்தினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது கட்சியின் கொடியை இன்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். அந்தக் கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறம் இருக்க நடுவில் மஞ்சள் நிறம் இருக்கின்றன. அதில் மஞ்சள் நிற பகுதியில் 2 போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார் விஜய். அதில், ‘தமிழன் கொடி பறக்குது...தலைவன் யுகம் பொறக்குது... வீரக் கொடி... விஜயக் கொடி’ உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளது.

Advertisment

அப்போது திரையில் கட்சி பாடல் ஒளிப்பரப்பட கீழே அமர்ந்து பார்த்திருந்த விஜய் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய விஜய் உறுதிமொழி எடுத்ததோடு விரைவில் மாநாடு நடக்கும் என்றார்.

actor vijay Bussy Anand Tamilaga Vettri Kazhagam tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe