/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DX3KARFU0AAWjXm.jpg)
கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பார்த்திபன், சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும் 8 தேசிய விருதுகள் பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் கடந்த 8ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது.இவர்களது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று கீர்த்தனா, அக்ஷய் தம்பதிகளை வாழ்த்த திடீர் பிரவேசம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் விஜய். விஜய்யின் இந்த திடீர் பிரவேசத்தால் கீர்த்தனா, அக்ஷய் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த சந்திப்பின் போது பார்த்திபன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். கீர்த்தனா, அக்ஷய் திருமணத்தின்போது விஜய் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)