Vijay film actress varsha bollamma donated his eye's

2015-ல் வெளியான 'சதுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. விஜய் சேதுபதியின் '96' மற்றும் விஜய்யின் 'பிகில்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான 'செல்ஃபி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment