Vijay father sa chandrasekar drived cycle rickshaw Haridwar photos goes viral

நடிகர் விஜய்யின் தந்தை, ஹரித்வாரில் சைக்கிள் ரிக்‌ஷாஓட்டும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும், பல படங்களில் முக்கியகதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது, கோலிவுட்டில் முக்கிய டைரக்டர்களாக உள்ள ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் போன்றவர்கள்எஸ்.ஏ.சந்திரசேகரிடம்உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளனர்.77 வயதான எஸ்.ஏ.சந்திரசேகர், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

Advertisment

இந்நிலையில், கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல், இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் தனது உதவியாளர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், முதலில் ஹிமாலயாஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அதன் பிறகு ஹரித்துவாருக்கும் சென்றுள்ளார். அங்கே தனது உதவியாளர்களை சைக்கிள் ரிக்‌ஷாவில் அமரவைத்து சிறிது தூரம் ஓட்டிச் சென்றும் இருக்கிறார். மேலும் அந்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய உதவியாளர்களை சைக்கிள் ரிக்‌ஷாவில் அமரவைத்து எஸ்ஏசி ஓட்டிச் சென்ற சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.