Advertisment

விஜய் கொடுத்த அறிவுரை - மீறிய ரசிகர்கள் 

vijay fans used tvk flag in the goat celebration

Advertisment

சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வரும் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜயகாந்த் தோற்றம், டி ஏஜிங் செய்யப்பட்ட விஜய், மறைந்த பவதாரிணி குரல் ஆகியவற்றை ஏ.ஐ. தொழில் நுட்ப உதவியுடன் மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் முதல் படம் ‘தி கோட்’ என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தி கோட் படம் இன்று (05.09.2024) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளாவில் இப்படத்தின் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில், ரசிகர் அங்கு பேனர் வைத்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கியதையடுத்து விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், மேளதாளத்துடனும் ரசிகர்கள் கொண்டாடினர். கேரளாவிலுள்ள திரையரங்கிலும் தமிழ்நாட்டிலுள்ள சில திரையரங்கிலும் விஜய்யின் த.வெ.க கட்சி கொடியை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் விஜய்யின் கட்சி கொடி அறிமுக விழா நடைபெற்ற நிலையில், ரசிகர்களுக்கும் தொண்டர்களும் ‘தி கோட்’ படம் வெளியாகும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரையும் கட்சி கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்றும் விஜய் வாய்மொழி வாயிலாக அறிவுரைகளை வழங்கியதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tamilaga Vettri Kazhagam The Greatest of All Time actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe