சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார். இப்படி இரு பெரும் நட்சத்திரங்களும் அரசியலில் குதித்துள்ள இந்த சமயத்தில் தற்போது புதியதாக அரசியல் களத்தில் அதிகம் விவாதிக்கப்படும் பெயர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய்யும் தற்போது அரசியலில் குதிக்கப்போவதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருக்கும் நிலையில் தற்போது மதுரை விஜய் ரசிகர்கள் புதியதாக ஒரு போஸ்டரை ஊர் முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி "நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22 அன்று அவர் முக்கிய முடிவு எடுக்கிறார் ஜோசப் விஜய் என்றும், தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் என்றும், மேலும் தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம். தமிழக மக்கள் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி. விவசாயிகள் வரவேற்பு. திரையுலகினர் வாழ்த்து" என்று அச்சிட்ட போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
முடிவெடுக்கிறார் ஜோசப் விஜய்.... மதுரை போஸ்டரால் பரபரப்பு
Advertisment