Advertisment

போட்டோவால் வந்த வினை... திட்டுவாங்கும் கீர்த்தி சுரேஷ்! 

keerthy suresh

விஜய்யின் 62ஆம் படத்தை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார். மேலும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் பெரிய அரசியல் தலைவர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் சோஃபாவில் உட்கார்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்து கீர்த்தி சுரேஷை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

Advertisment
vijay62 armurugadoss keerthysuresh vijay62
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe