vijay fans poster goes viral on social media

நடிகர் விஜய், படங்களைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகபல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

கடந்த ஏப்ரல் மாதம்டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை மதிய உணவு இலவசமாக பல்வேறு இடங்களில் வழங்கினர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு வருகிற 17 ஆம் தேதி சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தவுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியானது.

விஜய் ஒரு புறம் இதுபோன்ற முன்னேற்பாடுகளை எடுத்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் விஜய் குறித்து ஒட்டி வரும் போஸ்டர்கள் அவ்வப்போது பரபரப்பை எற்படுத்தும். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் 'மக்கள் ஆட்சி மலரட்டும். விரைவில் மதுரையில் மாநாடு' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment