vijay fans meet photo goes viral on internet

Advertisment

நடிகர் விஜய் 5 மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் சந்தித்தார். இந்த நிகழ்வின்போது கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்திருந்ததாகக் கூட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அப்படி பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிர்வாகிகள் சந்திப்பிற்குப் பிறகு இன்று மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.

அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என கிட்டத்தட்ட 350 பேருக்கும் மேலாக இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில், வாரிசு பட வெளியீடு குறித்தும்தேர்தல் உள்ளிட்ட அரசியல் பேச்சுக்கள் குறித்தும் பேசப்பட்டதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முன்வந்தார். அப்போது அந்த ரசிகரை தனது கையில் தூக்கித்தாங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.