Advertisment

களைகட்டும் ப்ரொமோஷன் - அஜித் ரசிகர்கள் வீட்டில் விஜய் ரசிகர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு

vijay fans invited ajith fans to watch varisu in pudukottai

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத்திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன. இதனால் அவர்களது ரசிகர்களைத்தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.

Advertisment

இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், பட்டுக்கோட்டையில் உள்ள விஜய் ரசிகர்கள்அஜித் ரசிகர்களின்வீடுகளுக்கு சென்று வாரிசு படத்தைப் பார்க்குமாறு வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள் வைத்து அழைப்பு விடுத்துள்ளனர்.பொதுவாக தங்களின்ஹீரோக்கள் படங்கள் வெற்றி பெற பால்குடம் எடுப்பது, ரத்ததானம் கொடுப்பது, அன்னதானம் செய்வது எனப் பல முன்னேற்பாடுகளை ரசிகர்கள் செய்வார்கள். இதில் எந்த விதத்திலும் இல்லாமல், பட்டுக்கோட்டைவிஜய் ரசிகர்கள் புதுமையாக இப்படி செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பலரதுகவனத்தை ஈர்த்துள்ளது.

varisu movie Thunivu actor vijay ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe