pazhani

அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது.

Advertisment

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொளிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இதன்படி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்படும் எனச் சீனா தெரிவித்தது. ஆனால் நேற்று லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக அரசு, எதிர்க்கட்சிதி.மு.கவினர் நிதியுதவி செய்தனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கரோனா அச்சுறுத்தலால் ரசிகர்களை எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் சிரமப்படும் எளியோருக்கு உதவுங்கள் என்று விஜய் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவ விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான வரவோலையை, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபாலா, தேனி மாவட்டத் தலைவர் பாண்டி ஆகியோர் ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினர்.