சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகள்மத்தியில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரத்தில் பீஸ்ட் படம் பார்க்க வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு விஜய் ரசிகர்கள் தல ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.