Advertisment

கரோனா தொற்று...மௌனம் காக்கும் விஜய்...! களத்தில் இறங்கிய ரசிகர்கள்..!

கரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்குச் சமீபத்தில் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் 200 முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

Advertisment

gdg

இந்நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் கோவை தூய்மைபணியாளர்களுக்கு மாஸ்க்குகள், கையுறைகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உட்பட பல்வேறு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்களைக் கோவை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி உதவி செய்தனர்.மேலும் கோவை சிஎம்சி காலனியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களையும் வழங்கி, சுகாதாரமற்று இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட பொறுப்பாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த இந்த செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

master film actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe