Advertisment

அஜித் ரசிகர்களை பின்பற்றும் விஜய் ரசிகர்கள்!

vijay fans ask Indian cricketer Mohammed Shami beast update

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாகபல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் தலைப்பு மற்றும் பூஜையை தவிர வேற எந்த ஒரு அப்டேட்டையும்படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் பொறுமையை இழந்த அஜித் ரசிகர்களால் உள்ளூர் பிரபலம் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். அந்த வகையில் இந்தியா - இங்கிலாந்துஇடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மெயின் அலியிடம் அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட் கேட்ட விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Advertisment

இந்நிலையில் அஜித் ரசிகர்களை போலவே விஜய் ரசிகர்களும் 'பீஸ்ட்' படத்தின் அப்டேட்டைகேட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம்வெளியாக உள்ள நிலையில் தற்போது வரை படத்தின் டீசர், ட்ரைலர்வெளியாகவில்லை. இதையடுத்துஇலங்கைக்கு எதிராக நேற்று(15.3.2022) நடந்த 2 வது நாள் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் முஹம்மது ஷமியிடம், விஜய் ரசிகர் ஒருவர் 'பீஸ்ட்' அப்டேட் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

Mohammed shami valimai ajith actor vijay Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe