Advertisment

மிஷ்கினின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபம்

Vijay fans are angry with Mysskin speech about leo update

இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மேடையில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் டைனோசர்ஸ் பட இசை வெளியீட்டு விழாவில், "10 மணி ஆச்சு... எல்லாரும் போய் தண்ணி அடிங்க., சிகரெட் அடிங்க, தூங்குங்க" என மேடையில் பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவர் பேசுகையில், "லியோ பட இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்குது. படம் ரொம்ப நல்லாவந்திருக்குனு கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். நிச்சயம் படம் வெற்றியடையும்" என்றார்.

Advertisment

இதில் விஜய்யை அவன் இவன் என்று சொல்லியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மிஷ்கினை கிண்டல் செய்தும் பொது இடத்தில்மரியாதையாக பேச வேண்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் சிறிய வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.

actor vijay director mysskin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe