Vijay Deverakonda vd11 movie tittle kushi

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்துவிஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி 11 என' பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 23 தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. கலர் ஃபுல்லாகவெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டரைசமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்திற்கு ’குஷி’ என்றுபெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'குஷி' படத்தின்தலைப்பைஇந்த படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது.இதைபார்த்த ரசிகர்கள் ’குஷி’ தலைப்பில் அப்போவிஜய் நடித்தார், இப்போ விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என்று கூறி அந்த படத்தை போன்று இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதேதலைப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு படம் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.