பாக்சிங்கில் மிரட்டும் விஜய் தேவரகொண்டா... கவனம் ஈர்க்கும் 'லைகர்' க்ளிம்பஸ்! 

 Vijay Deverakonda starring liger movie glimpse released

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

alt="https://www.youtube.com/watch?v=FqSpkA_-S_0&t=1s" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b0dd0c24-f6c2-4427-bc57-c74cfed5d0c4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_20.jpg" />

விஜய் தேவரகொண்டா மற்றும் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவரும் படக்குழு, படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோவைவெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் டீ விற்கும் பையனாகவரும் விஜய் தேவரகொண்டா இந்தியா சார்பாக மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு ஆக்சன் அதிரடியில் மிரட்டி இருக்கிறார். இயக்குநர்பூரி ஜெகன்நாத் தனக்கே உரித்தான ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படத்தின்க்ளிம்பஸ்வீடியோ தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

liger vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe