Vijay Deverakonda sends 100 fans to Manali

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா கடைசியாக லைகர் படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிவ நிர்வாணா இயக்கும் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இப்படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சமந்தா மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சமந்தா தற்போது குணமடைந்து படங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே, விஜய் தேவரகொண்டா கடந்த சில வருடங்களாக தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களை ஒன்றிணைத்து, அதற்கான செலவுகள் அனைத்தும் கவனித்துவருகிறார். அந்த வகையில், இந்தாண்டு 100 ரசிகர்களைதேர்வு செய்து அவர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதன்படி 100 ரசிகர்களை தேர்வு செய்து மணாலிக்கு அனுப்பியுள்ளார். ரசிகர்கள் விமானத்தில் உள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் இந்த வீடியோவினைதற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.