Advertisment

'நான் பெண்களை ரொம்ப மதிக்கிறவன்...' - ரசிக்க வைக்கும் விஜய் தேவரகொண்டா

Advertisment

Vijay Deverakonda Samantha kushi trailer released

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இவர் இசையில் கடந்த மே மாதம் வெளியான 'என் ரோஜா நீயா...' என்ற பாடல் நல்ல வரவேற்பைப்பெற்றது. இப்பாடலின் வரிகள் முழுவதும் மணிரத்னம் இயக்கிய படங்களின் தலைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் தீவிர மணிரத்னம் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், காஷ்மீரில் பேகம் என்ற முஸ்லீம் பெண்ணாக வருகிறார் சமந்தா. அவரைப் பார்த்தவுடன் விஜய் தேவரகொண்டாவுக்கு காதல் வருகிறது. அதற்காக பல முயற்சிகள் எடுக்கிறார். அதில் வெற்றியும் கண்டு, ஒரு கட்டத்தில் சமந்தா முஸ்லீம் இல்லை பிராமின் என விஜய் தேவரகொண்டாவிடம் சொல்ல, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார்கள். பின்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறித்திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும் 1 வருடத்திற்குள் சிறந்த ஜோடியாக நிரூபிக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அந்த முடிவை காப்பாற்றினார்களா இல்லையா, திருமணத்திற்குப் பிறகு இருவரும் வாழும் நிகழ்வுகளை காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

ட்ரைலரில் வரும் வசனங்கள், 'மேரேஜ்னாலே சாவு தான்டா...' என விஜய் தேவரகொண்டா நண்பர் பேசும் வசனம் 'ஒரு புருஷன்னா எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த சமூகத்துக்கு நான் காட்டுறேன்...' என விஜய் தேவரகொண்டா சமந்தாவிடம் பேசும் வசனம், 'மார்க்கெட்டில் எல்லாம் என்னை தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனா... நான் பெண்களை ரொம்ப மதிக்கிறவன்...' என்று பணிப் பெண்ணிடம் விஜய் தேவரகொண்டா பேசும்வசனம் ரசிக்க வைக்கிறது. இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

samantha Ruth Prabhu vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe