விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த பின் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நடிப்பை தாண்டி விஜய் தேவரக்கொண்டா ‘ரௌடி’ என்னும் பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பிராண்டின் லோகோ ரௌடி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு குறுக்கே ஒரு கோடு போடப்பட்டிருக்கும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் இருவர் பைக் நம்பர் பிளேட்டில் நம்பர் ஒட்டாமல், இந்த லோகோவை ஒட்டியிருக்கின்றனர். அதை பார்த்த போலீஸார் அவர்களை பிடித்தனர். பின்னர், இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகொள் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய அன்பைநிரூபிக்க நிறைய இடங்கள் இருக்கின்றன, அதுயார் மீதென்றாலும். அன்பைக் காட்ட பைக்கில் பல பாகங்கள்இருக்கின்றன. ஆனால், நம்பர் பிளேட்டைநம்பர் ஒட்டவே வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
— Vijay Deverakonda (@TheDeverakonda) March 20, 2019
விஜய் தேவரகொண்டா ‘டியர் காம்ரட்’ என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மே 31ஆம் தேதி நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹீரோ என்ற தலைப்பில் நான்கு மொழிகளில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் விஜய். இந்த படத்தில் பைக் ரேசர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய ரசிகர்களை விஜய் தேவரகொண்டா ரௌடி என்றுதான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.