/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/28_24.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லைகர்'. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ, முதல் பாடல் மற்றும் தீம் பாட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'லைகர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)