Advertisment

கை நழுவிய ஜனகணமன; அப்செட்டில் விஜய் தேவரகொண்டா

vijay deverakonda jgm movie stopped

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'லைகர்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானதோடுவசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜனகணமன(JGM)படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சார்மி கவுர், வம்ஷி பைட்டிப்பள்ளி, மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் ஜனகணமன(JGM)படம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகர் படத்தின் தோல்வியின் காரணமாக ஜனகணமன(JGM)படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. அதனால் பூரி ஜெகன்நாத்தும், விஜய் தேவரகொண்டாவும்இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்படத்தை கைவிட முடிவு எடுத்துள்ளதாககூறப்படுகிறது.

liger vijay devarakonda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe