Advertisment

விராட் கோலியின் பயோபிக்; பிரபல நடிகர் விருப்பம்

Vijay Deverakonda expressed interest acting Virat Kohli's biopic

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை வைத்து 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி', என்ற பெயரில் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் எப்போது உருவாக்கப்படும் என ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை பார்க்க விஜய் தேவரகொண்டா, ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் எந்த கிரிக்கெட் வீரரின்பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, “தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஆனால் அதில் சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால்விரைவில் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

team india vijay devarakonda virat kholi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe