Vijay Deverakonda to Donate Part of Kushi Remuneration

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் நடத்தினர். அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு வெற்றியை பகிர்ந்தார். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசிய நிலையில், அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

Advertisment