vijay devarakonda wish to act vetrimaaran pa.ranjith films

Advertisment

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இவர் இசையில் கடந்த மே மாதம் வெளியான 'என் ரோஜா நீயா...' என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடலின் வரிகள் மணிரத்னம் இயக்கிய படங்களின் தலைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் இயக்குநர் தீவிர மணிரத்னம் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரிடம் எந்த தமிழ் இயக்குநருடன் பணியாற்ற விருப்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "வெற்றிமாறன், பா. ரஞ்சித் இவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்னுடைய சிறு வயதில் கவுதம் மேனன் படங்கள் பிடிக்கும். இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

மேலும் திருமணம் தொடர்பான கேள்விக்கு, "விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முன்பெல்லாம் திருமணம் பற்றி பேசினாலே அதை தவிர்ப்பேன். இப்போது அதைப் பற்றி நிறைய விவாதிக்கிறேன். நண்பர்களின் திருமணத்தை ரசிக்கிறேன். அவர்களில் நல்ல திருமண வாழ்வையும், மோசமான வாழ்வையும் பார்க்கிறேன். இரண்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது. வாழ்க்கையில் அந்த சேப்டரை அனைவரும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்" என்றார்.