Advertisment

தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் தேவரகொண்டா டீம்! 

vjd

Advertisment

'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்' என்ற படத்தின் தோல்விக்கு பின் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கையில் கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் தடைப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் ஹிந்தியில் ரிலீஸாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு பின் அடுத்து வேறு எந்த படத்திலும் நடிக்க விஜய்தேவரகொண்டா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டா படத்தை தயாரிக்கப்போவதாக நடிகர்கள் தேர்வை நடத்தி வந்துள்ளனர். இதனால் விஜய்தேவரகொண்டா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “விஜய் தேவரகொண்டா குழுவினரான நாங்கள், சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்துப் படமெடுப்பதாகவும், நடிகர் நடிகையர்களுக்கான ஆடிசன் நடைபெறுவதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவதைக் கவனித்தோம்.

Advertisment

விஜய் தேவரகொண்டா தொடர்பான எந்தவொரு படத்தை பற்றிய அறிவிப்பை அவரோ அல்லது தயாரிப்பாளர்களோ வெளியிடுவார்கள். விஜய் தேவரகொண்டாவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் உறுதி செய்யப்படும்.

இது போன்ற மோசடிக்காரர்களின் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் அனைவரும் கவனமாகவும், வரும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay devarakonda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe