Advertisment

'நான் ட்விட்டரில் போடும் பதிவிற்கு மக்கள் போடும் ஒரே கம்மெண்ட் இதுதான்' - விஜய் தேவரகொண்டா

vijay devarakonda

Advertisment

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் 'நோட்டா'. அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, சன்சனா நடராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பிக்பாஸ் 2 புகழ் யாஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா பேசியபோது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் நான் என்ன பதிவிட்டாலும் ரசிகர்கள் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடுகிறார்கள். அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங். இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை" என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/g523SCFRsJE.jpg?itok=03zLnq9K","video_url":" Video (Responsive, autoplaying)."]}

notapressmeet NOTA actorVijayDeverakonda arjunreddyhero
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe