Advertisment

"தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும்" - விஜய் தேவரகொண்டா உறுதி

vijay devarakonda speech in kushi movie coimbatore press meet

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். வருகிற 1 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளரின் சந்திப்பு சென்னையைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் நடைபெற்றது. இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத் வெளியிடுகிறார்.

Advertisment

விஜய் தேவரகொண்டா பேசுகையில், '' என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும். 'பெள்ளி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்'.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

Advertisment

vijay devarakonda
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe