விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வந்த டியர் காம்ரேட் படம் கலவையான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரண் ஜோகர் ருபாய் 6 கோடிக்கு வாங்கியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவையே இந்த ஹிந்தி ரீமேக் மூலம் ஹிந்தி படவுலகில் அறிமுகம் செய்ய கரண் ஜோகர் திட்டமிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரீமேக் என்றால் வேண்டாம் என்றும், புதிய கதை என்றால் தான் நடிப்பதாக விஜய் தேவரகொண்டா கரண் ஜோகரிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தான் எப்போதும் ரீமேக் படங்களில் நடிக்கமாட்டேன் என விஜய் தேவரகொண்டா ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.
ஹிந்தி பட வாய்ப்பை தவிர்த்த விஜய் தேவரகொண்டா..! அதுவும் மிக பெரிய டைரக்டர் படமாம்..!
Advertisment