Advertisment

“மூன்று பேர் படம் பார்த்து அழுதனர்...”- விஜய் தேவரகொண்டா பாராட்டு!

vijay devarakonda

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

வெளியான நாள் முதலிலிருந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தேவரகொண்டா படக்குழுவை பாராட்டியுள்ளார்.

Advertisment

அதில், 'சூரரைப் போற்று' திரைப்படத்தை என் பெரிய நண்பர்கள் கூட்டத்தோடு பார்த்தேன். 3 பேர் படம் பார்த்து அழுதனர். வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் சாதிப்பதைப் பார்த்து நான் படம் முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்.

சூர்யா அண்ணா, என்ன ஒரு அட்டகாசமான நடிகர். ஒரு நடிகராக முழு அர்ப்பணிப்பையும் தந்து நடிக்கும்போது அவர் மீது அன்பை மட்டுமே உணர முடியும். அதைத் தயாரிப்பாளராகவும் ஆதரித்தது முக்கியமானது.

அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான பெண்களை சுதா எங்கே தேடிப் பிடிக்கிறார் என்று அதிசயிக்கிறேன். மிகவும் இயல்பாக, தனது நடிப்பின் மீது முழு கட்டுப்பாடு இருப்பவராகத் தெரிகிறார். சுதா, உங்களுடன் விரைவில் பணியாற்றுவேன். ஒரு இயக்குனராக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு இது.

ஜி.வி.பிரகாஷின் உயர்தரமான இசை, நிகேத் பூமியின் சிறப்பான ஒளிப்பதிவு, துணை நடிகர்களின் உயர்ந்த நடிப்பு. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. எனவே, 'சிம்ப்ளி ஃப்ளை' புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். தமிழ் அல்லது தெலுங்கில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்துள்ளார்.

vijay devarakonda
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe