விஜய் தேவரகொண்டா நடிப்பில் இம்மாதம் வெளியாகும் 'அர்ஜூன் ரெட்டி' !

vijay devarakonda

விஜய் தேவரகொண்டா - பூஜா ஜாவேரி இணைந்து நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது. இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவமாகும். விஜய் தேவரகொண்டாவை வைத்து சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம். இதை தமிழுக்கு மொழிமாற்றுப் படங்களை டப் செய்து வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவரான ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.

இதுகுறித்து அவர் பேசியபோது... "சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் கீதாகோவிந்தம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். விஜயசாந்தி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். 'அர்ஜூன் ரெட்டி' படமும் சூப்பர் குட் தயாரித்த அனைத்து படங்களை போல அருமையான கதையம்சம் கொண்ட படம். ஐந்து சூப்பர் ஹிப் பாடல்கள் இந்த படத்தில் உள்ளன" என்கிறார் ஏ.என்.பாலாஜி. பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்கியுள்ளார்.

vijay devarakonda taxiwala
இதையும் படியுங்கள்
Subscribe