Advertisment

விஜய் தேவரகொண்டா படத்திற்கு விஜய்யின் ஹிட் பட தலைப்பு

vijay devarakonda movie vd11 tittle name kushi

Advertisment

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்துவிஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி 11 என' பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'குஷி' படத்தை தலைப்பையே இந்த படத்திற்கு வைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிடவுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இதேதலைப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு படம் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.

samantha Ruth Prabhu vijay devarakonda actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe