கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில்,கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் கவனமாக இருக்கும்படி வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் தேவரக்கொண்டா கரோனா விழிப்புணர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

cscv

Advertisment

"என் அன்பானவர்களே பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.முகத்தைத் துணியால் மூடுவது கரோனா தொற்றைக் குறைக்கும்.மருத்துவ முகக் கவசங்களை மருத்துவர்கள் பயன்பாட்டுக்கு விடுங்கள். மற்றவர்கள் கைக்குட்டை,துண்டு, துப்பட்டா எனப் பயன்படுத்தி உங்கள் முகத்தை மூடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகள் பரவலாக வந்ததை அடுத்து விஜய் தேவரகொண்டா இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisment