Advertisment

'என் ரோஜா நீயா...' - காதலியை அறிமுகப்படுத்தும் விஜய் தேவரகொண்டா?

vijay devarakonda love story viral

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தமிழிலும் 'நோட்டா' படத்தில் அறிமுகமாகியிருந்தார். அவரது தெலுங்கு படங்கள் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அந்த வகையில் தற்போது சமந்தாவுடன் அவர் நடித்துள்ள 'குஷி' படம் வருகிறசெப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.

Advertisment

இதனிடையே விஜய் தேவரகொண்டாவுக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அவருடன் ஜோடியாக 2 படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகாவுடன் அவர் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. சமீப காலமாக குஷி படத்தில் சமந்தாவோடு இணைந்து நடித்ததால் அவருடன்நெருங்கிப் பழகியதாக முணுமுணுக்கப்பட்டது.

Advertisment

விஜய் தேவரகொண்டவும் தான் கல்லூரி காலங்களில் சமந்தாவின் தீவிர ரசிகர் என்றும் அவருடன் நடிப்பது நெகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சமந்தாவின் யசோதா பட ட்ரைலர் குறித்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் முன்பு பதிவிட்ட அவர், "சமந்தாவை முதன் முதலில் பெரிய திரையில் பார்த்தபோதே விழுந்துவிட்டேன். இன்றைக்கும் அவர் ரசிக்க வைக்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒரு பெண்ணுடன் கைகோர்த்து இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "நிறைய நிகழ்ந்துவிட்டது. ஆனால் இது உண்மையாகவே ஸ்பெஷலானது. விரைவில் அறிவிக்கப்படும்" என விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார். இது அவரது காதல் பற்றிய அறிவிப்பாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.

samantha Ruth Prabhu rashmika mandana vijay devarakonda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe